சபரிமலை
கேரளாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2 ஆம் தேதி அன்று பிந்து மற்றும் கனகதுர்க்கா என்னும் 2 பெண்கள் அபரிமளிக்கு சென்று வந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மாநிலம் முழுவதும் கடும் வன்முறை வெடித்துள்ளது. வன்முறையில் ஒரு பாஜக தொண்டர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கலவரங்களில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் தொடரும் கலவரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடுகளும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் வீடுகளும் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் திருவெங்காட்டில் ஆர் எஸ் எஸ் தலைவர் சந்திரசேகர் வீடு சூறையாடப்பட்டதும் தலச்சேரி முன்னால் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் ஷம்சேர் வீட்டில் குண்டு வீசப்பட்டதும் கலவரங்களை மேலும் அதிகப்படுத்தி உள்ளன.
நேற்று பாஜக பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரன் வீட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது. அதிகாலை கண்ணூர் பகுதியில் கம்யூனிஸ்ட் தொடர் விஷாக் என்பவரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்துள்ளது. கோழிக்கோட்டிலும் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் இல்லத்தில் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல பாஜகவினர் கடைகளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைகளும் சூரையாடப்பட்டுள்ளன. இந்த கலவரங்களுக்கு பாஜகவினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை சமயத்தில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வது வழக்கமாகும். ஆனால் தற்பொது கேரளாவில் உள்ள கலவர நிலை காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவது மிகவும் குறைந்துள்ள்து. நேற்று இரவு 18 ஆம் படியில் மிகவும் குறைவான பக்தர்களே இருந்ததால் உடனக்குடன் தரிசனம் செய்ய முடிந்ததாக அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் குறைவு காரணமாக கேரள அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.