ரோம்

த்தாலி நாட்டில் வெயில் மிகவும் கடுமையாக உள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பல ஐரோப்பிய நாடுகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்து கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். பலருக்கு வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் இதில் அடங்கும்.

இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் வாட்டி வதைத்து வரும் வெயில் காரணமாக நீரிழப்பு காரணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வெப்ப அலை தாங்க முடியாமல் குடிநீருக்காக வரிசையாக நின்று வாங்கி அருந்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கிறது. குறிப்பாக இத்தாலியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில் மக்களுக்கு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

பலர் வெப்பம் காரணமாகச் சீக்கிரமாக வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் வெப்ப அலைகள் மோசமடைந்துள்ளது  வெப்பம் தொடர்பான உயிரிழப்பின் அபாயத்தை உயர்த்துகிறது என்று உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.