சென்னை

ள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படும் வேளையில் கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.   அந்த வருடம் அனைவரும் தேர்வு எழுதாமலே பாஸ் என அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்புக்களுக்கு மாற்றப்பட்டனர்.  இடையில் 10, 12 வகுப்புக்களுக்குத் திறக்கப்பட்ட போதிலும் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டன.

இரண்டாம் அலை கொரோனா பரவல் தீவிரமானதால் இந்த வருடமும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே பாஸ் என அறிவிக்கப்பட்டனர்.   தற்போது கொரோனா குறைந்து வருவதால் முதலில் 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

தமிழக அரசு இன்று அதாவது நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கபடும் என அறிவித்தது.  ஆனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  இதையொட்டி  பல மாவட்டங்களில் இன்று மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் தொடக்க நாளன்றே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.