டில்லி
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கடலோர மாநிலமான கோவாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கட்டுப்பட்டு அறைகள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு வெவ்வேறு உதவி எண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்,
”வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் அரபிக்கடலிலிருந்து மழைமேகங்கள் நெருங்கி வருகிறது. இதனால் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும், மழை பொழிவின்போது, பெரும்பாலும் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.”
எனத் தெரிவித்துள்ளது.
தவிர மும்பை நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது. இக்கு நேற்று ஒரே இரவில் மிதமான அளவு முதல் கனமழை பெய்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில்,
“இன்று அதிக கனமழை பெய்யும் என்பதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்படுகிறது. மும்பையின் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும்,”
என்று தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]