டில்லி

டல்நிலை காரணமாக ஜெர்மன் பிரதமர் ஆஞ்சலா மேர்கல் தேசிய கீதம் இசைக்கும் போது அமர்ந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்வின் போது இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கமாகும். அப்போது நிகழ்வில் கலந்திருக்கும் அனைவரும் மரியாதை தெரிவிக்கும் வகையில் எழுந்து நிற்க வேண்டும் என்பது முறையாகும்.

தற்போது ஜெர்மன் நாட்டின் பிரதமர் ஆஞ்சலா மேர்கல் இந்தியா வந்துள்ளார். அவர் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் பல நிகழ்வுகளில் கலந்துக் கொள்கிறார்.   அப்போது நடந்த ஒரு நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அமர்ந்திருந்தார்.

இது மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.  இந்நிலையில் ஜெர்மன் அரசு அதிகாரிகள் ஆஞ்சலாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதால் அவருக்கு தேசிய கீதம் இசைக்கும் போது அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.