கூடங்குளம்

கூடங்குளத்தில் உள்ள 1000 மெகவாட் திறன் கொண்ட இரண்டாவது அணுஉலையின் மின் உற்பத்தி வால்வு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் இயங்கி வந்தன.  முதல் அணு உலை கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் எரிபொருள் நிறப்புவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.   அத்துடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இன்று திடீரென ஏற்பட்ட வால்வு பழுது காரணமாக இரண்டாவது மின் உலையும் நிறுத்தப்பட்டுள்ளது.  பழுது சரி செய்யப்பட்டு உற்பத்தி தொடங்க குறைந்தது 2 நாட்களுக்கு மேல் ஆகும் என சொல்லப்படுகிறது.   இந்த இரண்டாவது அணு மின் உலை டர்பைன் பழுது காரணமாக கடந்த மே மாதம் 5 முதல் 29 வரை நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மாதமாகத்தான் ஓடிக்கொண்டு இருந்தது.

கூடங்குளத்தில் 3ஆவது மற்றும் 4ஆவது அணு மின் உலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் வரும் 29ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.     அது குறித்து உயர் அதிகாரிகள் கலந்துக் கொள்ளும் ஆய்வுக்கூட்டம் தற்போது நடக்கிறது.

இரண்டு அணுமின் உலைகளும் முழு அளவில் உற்பத்தியை விரைவில் தொடங்கும் என அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது