டில்லி

விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து மற்றும் அவர் ஆதரவாளர்கள் செங்கோட்டைக்கு அத்துமீறிச் சென்று காலிஸ்தான் கொடியை ஏற்றினார்கள்.  இது நாட்டில் கடும் பரபரப்பை உண்டாக்கியது.  டிராக்டர் பேரணியால் கடும் வன்முறை வெடித்தது.

 இந்நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  டில்லியின் எல்லைகளான காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மற்றும் மன்யாரி உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன  இதனால் இங்கு கடும் பரபரப்பு நிலவி வருகிறது.