கோபால்பூர்

ரிசா மாநிலம் கோபால்பூர்  பகுதியில் கரையை கடந்த ஃபானி புயல் மேற்கு வங்க மாநிலம் நோக்கி நகர்கிறது.

சென்னைக்கு மழையை அளிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல்  ஒரிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் மற்றும் சந்தாபாலி பகுதியில் இன்று காலை 8 மணிக்கு மேல் கரையை கடந்தது.    அந்த நேரத்தில் மணிக்கு 175-200 கிமீ வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

ஒரிசா மாநிலம் பூரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.    அத்துடன் ஆயிரக்கணக்கான மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.    ஏராளமான வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.    ஃபானி புயல் வீசும்  பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

இந்த பகுதிகளில் தற்போது மின்சார சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.    இந்த புயல் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால் மேற்கு வங்க மாநில அதிகாரிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ள்னர்.    பேரிடர் மீட்புப் பணியினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேற்கு வஙக மாநில தலைநகரான கொல்கத்தாவில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.   ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து அடியோடு ரத்து செய்யபட்டுள்ளது.    இதுவரை 147 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த புயலின் தாக்கம் ஒரிசாவின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆந்திராவில் பல மின் கம்பங்கள் சரிந்துள்ளதாகவும்,  பல இடங்களில் டிரான்ஸ்ஃபார்மர்கள்  சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் உருவான புயல்களில் கடந்த 43 ஆண்டுகளில்  மிகவும் வலுவானது ஃபானி புயல் ஆகும்.