டில்லி

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இந்தியப் பங்கு வர்த்தகம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி அந்நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட உள்ளது.   பல நாடுகளுக்கும் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர்.

இந்த சூழலில் முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்கி வருகின்றனர்.  கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து வந்தனர்.  இதையொட்டி உச்சத்தில் ஏறிய இந்தியப் பங்குச் சந்தையிலும் கடும் சரிவு காணப்பட்டது.

பலரும் வீழ்ச்சியை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தையில் பிற்பகலில் குறியீட்டு எண்ணில் 1406 புள்ளிகள் சரிந்து 45,554 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.   இதைப் போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 432 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 13,328 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. இதனால் வங்கி, நிதி, ஊடகத்துறை ஆகியவை கடும் சரிவைச் சந்தித்துள்ளன.