சென்னை

கொரோனா அதிகரிப்பால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு சுற்றுலாத்தலங்கள் என ஏராளமானவை உள்ளன.   இவற்றில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கன்யாகுமரி போன்ற இடங்களில் பொழுதுபோக்கு தலங்களும், மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் ஆன்மீக தலங்களும் உள்ளன.

ஆன்மீக தலங்களுக்கும் சரி, பொழுது போக்கு தலங்களுக்கும் சரி பொழுது போக்குத் தலங்களுக்கும் சரி தமிழகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.   கொரோனா காலம் முடிந்து இங்கெல்லாம் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.  அதே வேளையில் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிக அளவில் பரவும் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டில்லி போன்ற இடங்களில் இருந்து அதிக அளவில் பயணிகள் வருவதால் தமிழகத்தில் மேலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.  எனவே சுற்றுலாத் தலங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்காக பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.  எனவே தமிழகத்துக்கு வரும் வெளி மாநில சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.