ர்பின்

கொரோனா பரவல் காரணமாக வடகிழக்கு சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் வருட இறுதியில் சீனாவில் முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு அதன் பிறகு அது பல நாடுகளுக்குப் பரவி தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.  உலக அளவில் தற்போது கொரோனாவால் 23.04 கோடி பேர் பாதிக்கப்பட்டு 47.24 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 20.71 கோடி பேர் குணமடைந்து தற்போது 1.85 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.  மீண்டும் கொரோனா பேரிடர் தாக்கலாம் என்பதால் சீனாவில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இவ்வாறு கண்டறியப்பட்ட 16 பேரில் மூவர் ஹர்பின் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

இதையொட்டி ஹர்பின் நகரில் பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   இங்குள்ள உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், உள்ளரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.  நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.   மேலும்  பாலர் வகுப்புக்களுக்கு ஆன்லைன் வகுப்புக்களும் ஒரு வாரத்துக்கு நிறுத்தபட்டுள்ள்ன.

பாதிக்கப்பட்ட 16 பேரில் மூவர் தவிர மீதமுள்ளோர் ஃபூஜியான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்  ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள தொற்றுக்கும் ஹர்பின் நகரத் தொற்றுக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை.  இந்த மாகாணத்தில் ஷியாமென் மற்றும் புடியான் ஆகிய நகரங்களில் இந்த 13 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.