திருவாரூர்:
பிக்பாஸ் படிப்பிடிப்பு காரணமாக கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல் பங்கேற்கவில்லை.

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலை திறப்பு விழா இன்று மாலை அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் உள்ள குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் சாய், கவிஞர் வைரமுத்து, திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நட்ராஜன், ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது நண்பர்கள், ரசிகர்கள் செய்துள்ளனர். விழாவில், பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து திருவாரூருக்கு காரில் செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படிப்பிடிப்பு காரணமாக இந்த விழாவில் அவர் கலந்துகொள்ள வில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]