டெல்லி
மோசமான வானிலை காரணமாக டெல்லியில் 100க்கும் மேற்பட்ட விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் இன்று காலை அடர்த்தியான மூடுபனி காணப்பட்டதால் அங்கு மிக மோசமான வானிலை நிலவியது.
இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாகவும். விமானங்கள் சற்று தாமதமாக தரையிறங்கின எனவும் எந்தவொரு விமானமும் திசைதிருப்பப்படவில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதையொட்டி டெல்லி சர்வதேச விமான நிலையம் எக்ஸ் தளத்தில்,
”புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம்”
என்று பதிவிட்டுள்ளது.