
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி, தமிழில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த சாட்டை திரைப்படத்தில் மஹிமா நம்பியார்-க்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமானார்.
டப்பிங் கலைஞராக மட்டுமல்லாமல் நடிகையாகவும் ஒரு கிடாயின் கருணை மனு & காவல்துறை உங்கள் நண்பன் ராக்கி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ரவீனா ரவியின் தந்தை திடீரென காலமானார்.
ரவீனா ரவியின் தந்தையான ரவீந்திரநாத் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவீனா ரவியின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel