துபாய்: கொரோனா ஊரடங்கை அடுத்து மே மாதம் 27ம் தேதி முதல், துபாயில் பெரும்பாலான வணிக நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்படவுள்ளன.
நாளை(மே 27) முதல் மீண்டும் இயங்கவுள்ள அம்சங்களாவன:
* சமூக விலகலை கடைப்பிடித்தலுடன் கூடிய சினிமா தியேட்டர்கள். அவை தொடர் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்படும்
* துபாய் மால் ஐஸ் ரிங்க் மற்றும் துபாய் டால்ஃபினோரியம் போன்ற பொழுதுபோக்கு மையங்கள்
* விளையாட்டு அகடமிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உடல் பராமரிப்பு சுகாதார மையங்கள்
* சில்லறை மற்றும் மொத்த வியாபார கடைகள்
*  வெளியிலிருந்து திரும்பும் உள்நாட்டவர்கள் மற்றும் வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கான விமானங்களுக்காக, விமான நிலையம்
* மருத்துவ கிளீனிக்குகள் (காது, மூக்கு & தொண்டை துறை உள்பட), அதிகபட்சம் 2.5 மணிநேரங்கள் மற்றும் அதற்கும் குறைவான காலம் எடுக்கக்கூடிய அறுவை சிகிச்சைக்கான மையங்கள்.
* கல்வி மையங்கள் மற்றும் அவைதொடர்பான பயிற்சி மையங்கள், குழந்தைகளுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் சிகிச்சை மையங்கள்
அதேசமயம், மீண்டும் துவக்கப்படும் வணிக நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.