
துபாய்: கொரோனா கோரத்தாண்டவம் காரணமாக, இந்த ஆண்டு நடக்கவிருந்த ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி, அடுத்தாண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தொற்றால் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் எகிப்தியர்களால் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கலைத்த சிலமணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியை, அடுத்த 2021 அக்டோபர் 1 முதல் 2022ம் ஆண்டு மார்ச் 22 வரை நடத்தும் முடிவை ஆதரித்து நிர்வாகக் குழு ஏகமனதாக வாக்களித்தது.
துபாயின் எக்ஸ்போ கமிட்டியில் பணியாற்றும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
“துபாயில் நடைபெறும் கண்காட்சியில் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை சரியாக செய்து வருவதற்காக, நாங்கள் உறுப்பு நாடுகளுக்கு நன்றி கூறுகிறோம்” என்றார் அவர்.
Patrikai.com official YouTube Channel