ஏழை நாடுகளின் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிகள் உலகம் முழுவதையும் பாதிக்கும். எனவே ஒரு உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கி முன்னெடுக்க வேண்டிய நேரம் இது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள சுகாதார கட்டமைப்புகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவர்கள், வென்டிலேட்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சோதனை திறன் ஆகியவற்றின் பற்றாக்குறை நிலவுகிறது. உலகின் பணக்கார நாடுகளாக வர்ணிக்கப்படும் இவையே இந்நிலையில் இருக்கிறது எனில், மருத்துவ வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும் ஏழை நாடுகளின் நிலை வெகுமோசமாக உள்ளது. பத்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. உகாண்டாவில், 43 மில்லியன் குடிமக்களுக்கு 55  தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன. தற்போது இங்கிலாந்து நாட்டு குடிமக்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை எந்த ஏழை நாடுகளினாலும் வாங்க இயலாது. உண்மையில், கோவிட் -19 என்பது நம் வாழ்நாளில் கண்டிராத அளவில் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பேரழிவாகும். வளர்ந்து வரும் மற்றும் பணக்கார நாடுகளின் தலைவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த குடிமக்களும் ஒன்றிணைய சரியான நேரம் என ஒன்று இருக்குமாயின், இதுவே மிகச் சரியான தருணமாக இருக்கும்.

கொரோனா வைரஸ் (கோவிட் -19) ஒரு “சிறந்த நடுநிலையாளர்” அல்ல என்பதை நாம் இப்போது உணர்ந்திருக்கிறோம். உலகின் பெரும்பாலான ஏழை மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். இந்த ஏழை நாடுகள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் மோசமான விளைவுகளை சந்திக்கவுள்ளது. மேலும் ஏழ்மையான நாடுகளில், வைரஸ் தொற்றை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் இருந்து, வருமானம் இழந்த சமூகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவி செய்தல் வரை, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய அழுத்தத்தில் உள்ளன. அதற்க்கான திறனும், ஆதாரங்களும் குறைவாக உள்ளன. துணை-சஹாரா பிராந்தியத்தில் நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் முறைசாரா தொழில்கள் துறையில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு வேலையின்மை, நோய்வாய்படுதல் மற்றும் பிற எவ்வித சலுகைகளையும் பெறவில்லை. எனவே மக்கள் மட்டுமின்றி, ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தனது வருமானங்களில் மூன்றில் ஒரு பங்கை இழக்க நேரிடும்.
உலக சுகாதார நிறுவனம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக மற்றும் உடல்ரீதியான இடைவெளியை கடைப்பிடிக்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் ஒற்றை அறையை பகிர்ந்துக் கொண்டு வாழும் குடும்ப அங்கத்தினர்களும், கை கழுவ தண்ணீர் கிடைக்காதவர்களும் வசிக்கும் பல நாடுகளில் இதை கடைப்பிடிப்பது என்பது சாத்தியமில்லாதது. உலகின் ஏழைகளில் பலருக்கும் உரிய உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. முழு ஆபிரிக்க கண்டத்திலும் சேர்த்தே, 20,000 தீவிர சிகிச்சை  மற்றும் பராமரிப்பு படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதன் ஒப்பீட்டு கணக்கீடு, ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 1.7  படுக்கைகள் என்ற அளவுக்கு சமமானது. மலாவியில் அதன் 17 மில்லியன் குடிமக்களுக்கு வெறும் 25 ஐசியு படுக்கைகளே உள்ளன. பங்களாதேஷில் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. ஆனால், அவர்களிடம் வெறும் 1,100 ஐசியு படுக்கைகள் மட்டுமே உள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் படி, இங்கிலாந்தின் ஒரு குடிமகனுக்கு சுகாதாரத்திற்கென அந்நாட்டு அரச செலவழிக்கும் தொகை சராசியாக ஆண்டுக்கு, $4,000 ஆகும். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு குடிமகனுக்கு சராசரியாக $ 12 மட்டுமே செலவழிக்கப்படுகிறது.
சீனாவையும், ஐரோப்பாவின் பெரும்பகுதிகளையும், கொரோனா வைரஸ் கடுமையான, தீவிரமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியுள்ளன. அதே சமயம், பல வளரும் நாடுகளில், வைரஸ் நெருக்கடியை விட, அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வேகமான தீவிரமான பாதிப்புகளை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொருதார நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளதால், ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்றவை மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. போக்குவரத்து மற்றும் விநியோக முறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் உணவு பொருள் விநியோகம் நடைபெறவில்லை. மேலும் பல ஆண்டுகளாக வறட்சி, தீவிர வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்திய வெட்டுக்கிளி தாக்குதல் போன்றவற்றால் உணவுப் பொருள் உற்பத்தி ஏற்கனவே குறைந்திருந்த நிலையில், கொரோனா முடக்கமும் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பசியினால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வளவுக்குப் பின்னரும், தற்போதுள்ள மருத்துவ அவசரநிலையை இந்த நாடுகள் எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வி முக்கியத்துவம் அடைகிறது. உதாரணமாக, கொரோனா தொற்றானது தென்னாப்பிரிக்காவில், செப்டம்பர் மாதவாக்கில் உச்சநிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இங்கிலாந்திற்கும் முன்பே அறிவிக்கப்பட அறிவிக்கப்பட்ட முடக்கம் காரணமாக இந்த நாடுகளில் அரசு மற்றும் மக்களின் வருமானம் வெகுவாக சுருங்கிவிட்டன. மேலும் இதன் பாதிப்பு இத்தாலியில் ஏற்பட்டதை விடவும் கடுமையானதாக உள்ளது. தென்னாப்பிரிக்கா தன் நாட்டு குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் இணைந்து ஒரு உள்நாட்டு நிதியை உருவாக்கி அதன் மூலம் மக்களின் உணவு மற்றும் பிற தேவைகளை நிவர்த்தி செய்ய உலகளவிலானதொரு  முயற்சியை முன்னெடுத்துள்ளது. இருப்பினும், இவ்வகை முயற்சிகள் ஆப்பிரிக்காவின் பணக்கார நாடுகள் கூட எதிர்வரவுள்ள சவாலை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமானதாக இருக்காது.
உலகின் பல நாட்டு தலைவர்களும் இந்த சூழலில் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். ஆனால் COVID-19 – ஆல் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் சமாளிக்கவும் ஒன்றிணைந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் தேவை. உதாரணமாக, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் தற்கால நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை சமமான அளவில் பங்குபெற வைக்கும் ஒன்றிணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அதற்கான அணுகுமுறைகள்,  பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோவின் பொறுப்புகளை தட்டிக்கழித்தல் அணுகுமுறை அல்லது அமெரிக்காவின் டொனால்ட் டிரம்பின் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஆனால், கோவிட் -19 பரவல் என்பது எல்லா இடங்களிலும் பரவியுள்ள நிலையில் இது நமது தலைவர்களின் திறமை மற்றும் தலைமை பண்பின் தன்மையை சோதிக்கும் பரிசோதனையாகவும் மாறியுள்ளது. அதேநேரத்தில், பரவலான மற்றும் கடுமையான வறுமையில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளில், ஏற்கனவே மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் இந்நிலையில், சிறந்த தலைவர்கள் கூட தங்கள் மக்களை சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற முடியாது என்பது துரதிஷ்டவசமானது. எனவே, வெளிநாட்டு உதவிகள்  இங்கே அவசியமாகியுள்ளது.
பணக்கார நாடுகள் தங்கள் உள்நாட்டு பணத்தில் அதிக கடன் வழங்க முடியும் என்றாலும், மற்ற நாடுகள் ஒளிரும் விளக்குகள் முதல் சிரிஞ்சுகள் வரை  இறக்குமதி எய்யும் அனைத்து பொருட்களுக்கும் பெரும் அளவிலான இறக்குமதி வரியை செலுத்த வேண்டும். கொரோனா நெருக்கடியின் பாதிப்புகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்தநேரத்தில் வெளிநாட்டு பணத்திற்கு நிகரான பெரும்பாலான நாடுகளின் பரிமாற்ற மதிப்பும் 25% சதவிகித அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் கடன் பெரும் நாடுகள் பெருமளவுக்கு செலவுகளை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளின் கடன் திருப்பி செலுத்துதலும் பெரும் செலவுக்குரியதாகியுள்ளது. இதற்கிடையில், கொரோனாவின் விளைவாக சுற்றுலாத்துறை, வெலிநாத்துஇல் இருந்து செந்த நாட்டுக்கு பணம் அனுப்புதல் போன்ற அந்நிய செலாவணி சார்ந்த அனைத்தும் முடங்கியுள்ளன. சாதாரண காலங்களிலேயே திண்டாடும் ஏழை நாடுகள், முன் அனுபவமில்லாத கொரோனா நெருக்கடி காலத்தில் தனது குடிமக்களின் அவசர கால அத்தியாவசியத் தேவைகளையும் கூட பூர்த்தி செய்ய இயலாமல் திணறுகின்றன. இதன் விளைவாக எச்.ஐ.வி சிகிச்சைகள், மலேரியா – காலரா ஒழிப்பு திட்டங்கள் போன்ற சுகாதாரம் சார்ந்த பிற திட்டங்கள் கிடப்பில் போடப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா தற்போதைய சமூகத்தின் ஒரே ஒரு பெரும் பிரச்சனையாகியுள்ளது.
ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு சர்வதேச அளவிலான உதவி தேவைப்படும் இந்த நெருக்கடியான நேரத்தில், அனைத்து வளர்ந்த நாடுகளும் அதிலிருந்து பின்வாங்கியுள்ளன. குறிப்பாக அமெரிக்க அனைத்து நாடுகளுக்கும் உதவ மறுத்து தன முகத்தை திருப்பிக் கொண்டுள்ளது. இங்கிலாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே தனது சொந்த பிரச்சனையில் மூழ்கிவிட்டது. காமன்வெல்த் நாடுகளின் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்  திறன் மண்ணை கவ்வி விட்டது. கொரோனா பரவலைத் தடுத்தல் உட்பட, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல தொற்று நோய்களை தடுத்தல் என்பது, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

2020 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகள் செலுத்த வேண்டிய 44 பில்லியன் டாலர் கடனை தள்ளுபடி செய்யும் ஒரு உலகளாவிய சிறப்பு திட்டத்தினை G20 நாடுகள் முன் வைத்துள்ளன. இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது தொழில்துறையை செயல்பாட்டில் வைத்திருக்க செலவழிப்பதாக உறுதியளித்த $ 8 ட்ரில்லியன் உடன் ஒப்பிடும்போது மிகமிகச் சிறிய பங்கு ஆகும். மேலும், ஏழை நாடுகளுக்கு ஒரே ஒரு நிபந்தனையுடன் தோராயமாக 2.5 ட்ரில்லியன் அளவுக்கு நிதி உதவி செய்யவும்முன்வந்துள்ளன. அதாவது இந்த தொகையை கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்ய பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும். மேலும், இந்த தொகை உலகளாவிய வருமானத்தில் வெறும் 3%   ஆகும்.
கோவிட் -19 நமக்கு கற்பித்த பாடம் என்னவெனில்,  இருந்தால், அது நம் வாழ்க்கை எவ்வாறு ஒருவருகொருவர் தொடர்புடையது என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. இதை உலகமயமாக்கலின் “பட்டாம்பூச்சி குறைபாடு” என்று நாம் அழைக்கலாம். இந்த உலகமயமாக்கல் காலத்தில், உலகின் ஏதேனும் இடத்தில் உருவாகும் அபாயம் நமது அனைவருக்குமான அபாயம் ஆகும். அமைப்புரீதியாக நாம் எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அதுவே நமது பலமும் ஆகும். கோவிட் -19 ஐப் பொறுத்தவரை, எந்த நாடு தொற்று நோயின் மையப்பகுதியாக இருக்கிறதோ, அந்த அநாடு எவ்வளவு ஆபத்தில் உள்ளதோ அதே அளவிற்கான அபாயத்தை நாமும் எதிர்கொள்வோம். நாமும் அதே தொற்று நோயினால் பாதிக்கப்படுவோம். எப்படி கொரோனா எல்லைகளுக்கு அப்பாலும் தனது வீரியத்தை காட்டுகிறதோ அதே அளவுக்கு நாமும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மற்றவர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே நமது ஆரோக்கியமும் அமைந்துள்ளது. . நாம் ஒரு சிரந்தை எதிர்காலத்தை பெற வேண்டுமானால், மற்ற நாடுகளில் உள்ளவர்களும் மனக்கு மிகவும் அவசியமானவர்கள் ஆவர். எல்லைகளை கடந்தும் இணைந்திருப்பதே எதிர்கால மனிதக்குலத்தை காக்கும்!!!
English: ஐயான் கோல்டின்
Tamil: லயா