திரைப்பட பாடல்களை தொடர்ந்து இசை ஆல்பங்கள் மற்றும் தனி பாடல் தொகுப்புகளை இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்று.

அறிவு மற்றும் தீ ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ ஒற்றை பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒற்றை பாடல் ஒன்றை வெளியிட்டார்.

அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எழுதி இசையமைத்து பாடிய ‘ஓ பெண்ணே’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.

உலகநாகயகன் கமலஹாசன் இந்த இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டார்.

‘ஓ பெண்ணே’ சிங்கிள் தனிப்பாடல் ஹிந்தியில் சில தினங்களுக்கு முன் வெளியானது தற்போது தமிழிலும் வெளியாகி அனைவரையும் “ராமா… ராமா ஹரே.. க்ரிஷ்ணா… க்ரிஷ்ணா ஹரே” என்று தாளம் போட வைத்திருக்கிறது.