தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
அக்டோபர் 16ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளது.
வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்தம் காரணமாக பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதேவேளையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.
டிசம்பர் மாதம் இறுதிவரை இந்த பருவமழை காலம் உள்ள போதும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகள் வறண்டு போயுள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் வடகிழக்கு பருவமழை ஒன்றையே நம்பியுள்ள நிலையில் சென்னை மக்களின் தாகத்தை தீர்க்குமா என்ற கவலை மக்களிடையே எழுந்துள்ளது.