சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.