திருப்பூர்
திருப்பூரில் அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது ஒரு போதை வாலிபர் மேடையில் ஏறி உள்ளார்.
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற ஊராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடந்தது.
திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அவர் ”உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களோடு நேரடி தொடர்புடையது. மாநகராட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினரை விட, மாநகரத்தந்தைக்கு அதிகாரம் அதிகம். அதிகாரம் படைத்த பதவியை நாம் வென்றெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேடையில் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வைகள் அணிவித்தும், மலர்க்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அந்த நேரம் திடீரென ஒரு வாலிபர் மதுபோதையில் மேடையில் ஏறினார். இதையொட்டி அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியினர் வாலிபரைக் கட்சியினர் கீழே அழைத்து சென்றனர்.