சென்னை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு போதை பொருள் சப்ளை செய்து அவரை போதைக்கு அடிமை யாக்கியவரான பிரசாத் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
போதை பொருள் விற்பனை செய்து வந்ததுடன், அதிமுக ஐடிவிக்கில் பணியாற்றி வந்த பிரசாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில், முன்னதாக திமுக ஐடி விங்கிலும், அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, இவருக்கு அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், காவல்துறையினர் திரையுலகினர் பல தரப்பினருடன் பழக்கம் இருந்த நிலையில், அதைக்கொண்டு, தைரியமாக திரையுலகம் உள்பட பல பகுதிகளிலும் போதை பொருள் சப்ளை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. போதை பொருள் விற்பனை மூலமே ஏராளமான பணம் சம்பாதித்து, திரைப்படம் இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

போதை பொருள் உபயோகப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கொடுத்த வாக்குமூலத்தில் பிரசாத், “என்னை வைத்து அதி ‘தீங்கிரை’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நான் நடித்தற்காக ஒப்பந்தப்படி முழு பணத்தையும் அவர் தரவில்லை. இதுதொடர்பாக நான் அவரை சந்தித்தபோதெல்லாம் அவர் என்னை மதுபானக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார். பின்னர் போதைப் பொருள் கொடுத்தார்.
எனக்கு ஏற்பட்ட கடன் உட்பட குடும்ப பிரச்சினை காரணமாக நானும், போதைக்கு அடிமையாகி, போதைப் பொருளை அடிக்கடி பயன்படுத்த தொடங்கினேன். அவர்மூலம் எனக்கு ஆப்பிரிக்க போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான், சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் உள்பட சிலரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்களிடமும் நான் நேரடியாகவும், பிற நபர்கள் மூலமாகவும் போதை வஸ்துவை வாங்கினேன். நான் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நான் தவறு செய்துவிட்டேன்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

யார் இந்த பிரசாத்?
இந்த நிலையில், போதை பொருள் விற்பனை செய்து வந்த பிரசாத் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது 33 வயதாகும் பிரசாத், திரைப்பட இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளதுடன், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளிலும் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது..
போதை பொருள் விற்பனை தொடர்பாக, கடந்த மே மாதம் 29-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரசாத், அப்போது, அதிமுக தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்துள்ளார். இவர், தனக்கு அரசியலில் பலரை தெரியும் என கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையில், பண ஆசை கொண்ட பிரசாத், வாலிபராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சியை வைத்து பணம் சம்பாதிக்க முடியவில்லை என தெரிந்ததும், , பின்னர் திமுகவில் இணைந்தார். அங்கு தனக்கு வேண்டியபட்டவர்கள் சிலர் மூலம், திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாகவும் பதவி வகித்துள்ளார். அப்போது நன்றாக சம்பாத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அங்கு அவர்மீது ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், அங்கிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்துள்ளார்.
அதிமுகவிலும் அவருக்கு ஐடி விக்கில் வேலை கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணத்தை சுருட்டி உள்ளார். தலா ரூ.2லட்சம் என 200 பேரிடம் இவ்வாறு பணம் வாங்கியதன் மூலும் ரூ.20 கோடி வரை மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துஉள்ளனர்.
மேலும், பிரசாத் உடன் தொடர்பில் இருந்த மதுரை ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்திலும், போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜானிடம் போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்துள்ளார். இது தொடர்புடைய பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரபல நடிகர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திரையுலகில் உள்ள போதை கலாச்சாரத்தால், என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பது குறித்து பிரபல பாடகி சுசி லீக்ஸ் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வெளிச்சம் போட்ட நிலையில், அவர்களும் இந்த விஷயத்தில் சிக்குவார்களா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழ் திரைப்படத் துறையில் வெளிப்படும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்து கடந்த ஆண்டு மீண்டும் பாடகி சுசித்ரா கமல் உள்பட பலர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். திரையுலக இரவு நேர விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது, போதை கலாச்சாரம் குறித்து, பிரபல நடிகர் கமல்ஹாசன் போன்ற சினிமா பிரபலங்களை உள்ளடக்கிய அவரது குற்றச்சாட்டுகள குறித்து, காவல்துறை விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குமுதம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட சேதத்தை ஒப்புக்கொண்டாலும், சுசித்ரா நடிகர், கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் வெள்ளித் தட்டுகளில் கோகைன் பரிமாறப்பட்டதாக கூறினார். சுசித்ராவின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் பரபரப்பான திருப்பத்தை எடுத்துள்ளன. மேடையில் ஏறுவதற்கு முன்பு தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கோலிவுட் துறைக்குள் பரவலான போதைப்பொருள் கலாச்சாரம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். சுசித்ராவின் இந்த குற்றச்சாட்டு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து காவல்துறை எந்தவொரு விசாரணையும் செய்யவில்லை.
பிரபல போதை பொருள் கடத்தல் மன்னான திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் விவகாரத்தில் கமஹாசன் மவுனம் காத்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு மற்றும் தொழில்துறையில் உள்ள அவரது சங்கங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாக்களில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் உட்பட முக்கிய சினிமா விஐபிக்கள் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டு, திருப்பதி குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை வலியுறுத்தினார். கோலிவுட் வட்டாரங்களுக்குள் போதைப்பொருள் கலாச்சாரம் பரவுவது குறித்து அவர் கவலை தெரிவித்தார், சட்ட அமலாக்க அதிகாரிகளிடமிருந்து விரைவான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை என்பதை எடுத்துக்காட்டினார்.
திருப்பதியின் அறிக்கை சட்ட அமலாக்கத்தின் மாறுபட்ட முன்னுரிமைகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது, போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் அவசரமின்மை இருப்பதாகக் கருதப்படுவதை விட, பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து கூறப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி. சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு கமல்ஹாசன் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் என்றும், அவரது கூற்றுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை பாலிவுட்டுடன் இணையாக உள்ளது, அங்கு நடிகர்கள் மற்றும் தொழில்துறையினர் போதைப்பொருள் மாஃபியாக்களால் கட்டுப்படுத்தப்படுவதாக சமீபத்திய ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், முந்தைய பிரச்சினைகள் குறித்தும் காவல்துறை விசாரிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.