டெல்லி: நாட்டின் 15வது குடியரசு தலைவராக நேற்று (ஜூலை 25ந்தேதி) பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முயை, ராஷ்டிரபதி பவனில், பிரதமல் மோடி சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
இந்தநிலையில், இன்று காலை மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல்முறையாக சந்தித்து பேசினார். அப்போது முர்முவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.