டில்லி:
மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மர்மமாகவே இருப்பதால், தமிழ்நாட்டின் நிர்வாகம் சீர்கெடாமல் இருக்க, ஜனாநதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
download-1உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கலில் ஒருவரான ரீகன் எஸ்.பெல் என்பவர் ஜனாதிபதிக்கு இது குறித்து அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை  சரியில்லாத காரணத்தால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பத்து நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும்  அவருக்கு என்ன வியாதி என்றும் அதற்கு என்ன கிசிச்சை நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.
jayalalitha-dead_liveday-1
எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா பணியாற்றும் செயல்திறனோடு உள்ளாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் அறிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லை என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.