சென்னை: துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், சென்னையில் இருந்து துபாய் சென்ற சென்னை விமானம் தாயகம் திரும்பியது..

துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் துபாயில் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவிலிருந்து (சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம்) பகுதியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (டிஎக்ஸ்பி) அருகே உள்ள எரிபொருள் தொட்டியில் ஆளில்லா விமானம் தாக்கியதையடுத்து, அவற்றின் சொந்த இடத்திற்குத் திரும்பியது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலைய தற்காலிகமாக மூடியது, இதன் காரணமாக அங்கு வரவிருந்த பல விமானம் திசைதிருப்பல் மற்றும் ரத்துசெய்யப்பட்டது. பாதுகாப்பு நிலைமை காரணமாக நடவடிக்கைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபாய்க்கு 200 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது.
[youtube-feed feed=1]