தராபாத்

டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குவோர் ஆகியோர் தங்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.   பெங்களூரு மென்பொருள் ஊழியர், புனைவுக்குத் துபாயில் இருந்து வந்த குடும்பத்தினர் ஆகியோர் மூலம் இந்த வைரஸ் அவர்கள் பயணம் செய்த வாகன ஓட்டுனர்களுக்கும் தொற்றி உள்ளது.   கொரோனா வைரஸ் பீதியால் ஓலா, ஊபர் போன்ற வாடகைக்காரில் ஷேர் செய்து செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஐதரபத் நகரில் ஒரு ஷேர் டாக்சி பயணிக்குத் தும்மல் மற்றும் இருமல் உண்டானதால் அவருடன் பயணித்த மற்ற பயணிகள் அவர் முக கவாம் மற்றும் கையுறை அணியாததால் தகராறு செய்துள்ளனர்.  இதற்கு கொரோனா வைரஸ் முக்கிய காரணம் எனத் தெரிவிக்கும் ஓட்டுநர் ஒருவர் தாங்கள் இந்த தகராற்றைத் தீர்த்து வைத்தாலும் தங்களுக்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாடகைக்கார்நிறுவனங்கள் தங்கள் ஓட்டுநர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை தெரிவிப்பதோடு கடமையை முடித்துக் கொள்வதாக ஓட்டுநர் சங்க செயலர் ஷேக் சலாலுதின் தெரிவித்துள்ளார்.   ஆனால் இந்த விழிப்புணர்வு தகவல்களுடன் பாதுகாப்பு சாதனங்களும் அளிக்க வேண்டும் என அவர் கூறி உள்ளார்.

மேலும் அவர், “வெளிநாடுகளான சான்ஃப்ரான்சிஸ்கோ போன்ற இடங்களில் உபெர் போன்ற நிறுவனங்கள் வாகனங்களில் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்கின்றனர்.   அது மட்டுமின்றி வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு நிறுவனங்கள் பணம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றன.  இதே நிலை ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.   ஆனால் இந்தியாவில் எங்களுடைய சங்கத்தை அங்கீகரிப்பதும் இல்லை.  எங்கள் வேண்டுகோளை கண்டுக் கொள்வதும் இல்லை.

நியூயார்க், லண்டன் போன்ற பெரு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வந்து போகும் வாகனங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகின்றன.   நாங்களும் இது குறித்து  விமான நிலைய சங்கங்களிடம் உதவி கேட்டுள்ளோம்.   யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் எங்களை அழைக்கும் அதிகாரிகள் எங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் என்ன செய்வது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இதே புகாரை ஸ்விக்கி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்கு வழங்கும் ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.    தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு பொருட்களை நிறுவனங்கள் வழங்குவதில்லை எனவும் முக கவசம் மற்றும் கையுறை இல்லாமல் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், அஜ்மீர், கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நடதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.   அது மட்டுமின்றி தாங்கள் வெகுதூரம் வாகனம் செலுத்த வேண்டி உள்ளதாகவும் முன்பின் தெரியாத வாடிக்கையாளர்கள் வீடுகளுக்குச் செல்வதாகவும் அதனால் பாதுகாப்பு பொருட்கள் அவசியம் எனவும் கூறி உள்ளனர்.