வாடி

ளில்லாமல் 13 கிமீ சென்ற ரெயில் எஞ்சினை பைக்கில் துரத்திச் சென்று ரெயில் ஓட்டுனர் நிறுத்தி உள்ளார்.

சென்னையில் இருந்து மும்பை வரை செல்லும் மும்பை மெயில் நேற்று மாலை 3 மணிக்கு வாடி ரெயில் நிலையத்தை அடைந்தது.   அந்த ரெயில் நிலையத்துடன் மின்சாரத் தடம் முடிவடைந்து அங்கிருந்து டீசல் எஞ்சின் அந்த ரெயிலை இழுத்துச் செல்வது வழக்கம்.   அதனால் ரெயில் பெட்டிகள் கழற்றப்பட்டு டீசல் எஞ்ஜினுடன் இணைக்கப்பட்டு ரெயில் சென்று விட்டது.

ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த மின்சார எஞ்ஜின் திடீரேன சுமார் 3.30 ம்ணிக்கு தானாக கிளம்பி செல்ல ஆரம்பித்தது.   அதை சிறிது தாமதமாக கவனித்த எஞ்சின் டிரைவர் உடனடியாக ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு அதை துறத்திச் சென்றார்.  சுமார் 20 நிமிடங்கள் சேஸிங்குக்கு பின்னர் 15 கிமீ தூரம் சென்ற ரெயில் எஞ்சினில் தாவி ஏறி அதை டிரைவர் நிறுத்தி உள்ளார்.

வாடி ரெயில் நிலைய அதிகாரிகள் இது குறித்து உடனடியாக அருகிலுள்ள ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்ததால்  வழியில் எந்த ரெயிலும் நிறுத்தப்படவில்லை.     அதே நேரத்தில் எதிரே வந்துக் கொண்டிருந்த ஒரு ரெயில் இந்த எச்சரிக்கையால் வேறு தடத்துக்கு மாற்ற்ப்பட்டது.  .  அதனால் நடக்க இருந்த ஒரு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.