செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார் .
த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் என்று படத்தின் ஹீரோ மோகன்லால் தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீஸரையும் அவர் வெளியிட்டுள்ளார். “ஜார்ஜ் குட்டியும் அவரது குடும்பத்தினரும் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வருகிறார்கள்” என்று குறிப்பிட்டு, டீஸரைப் பகிர்ந்துள்ளார் மோகன்லால்.
Georgekutty and his family are coming soon on @PrimeVideoIN#Drishyam2OnPrime #HappyNewYear2021 #MeenaSagar #JeethuJoseph @antonypbvr @aashirvadcine @drishyam2movie #SatheeshKurup pic.twitter.com/5l7cfCdCS3
— Mohanlal (@Mohanlal) December 31, 2020