2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் பிறந்த நாளான மே 21-ம் தேதி ‘த்ரிஷ்யம் 2’ படம் தொடக்கத்தை வீடியோவாக அறிவித்தார்கள்.

திரிஷ்யம் இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கிறார் .

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் பூஜையுடன் ‘த்ரிஷயம் 2’ படப்பிடிப்பு இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக ட்விட்டரில் புகைப்படத்துடன் தகவல் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

[youtube-feed feed=1]