செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]