மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “த்ரிஷ்யம் 2”.
இந்த படம் பிப்ரவரி 19 அன்று OTT தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. வெளியான நாளிலேயே இப்படம் ‘சூப்பர்ஹிட்’ அந்தஸ்தைப் பெற்று விட்டது.
இந்த படத்திற்கான லாபம் வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமல்ல. த்ரிஷ்யம் 2 படத்திற்கான சேட்டிலைட் உரிமை 15 கோடி ரூபாய்க்கு Asia Network கார்பரேஷனுக்கு, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப விற்கப்பட்டன. இதுவரை “த்ரிஷ்யம் 2” படம் ரூ .40 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. லாபக் கணக்கு இங்கே முடியவில்லை. இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமங்களுக்கான ஒப்பந்தங்கள் இன்னும் செய்யப்படவில்லை. அவை முடிந்தவுடன் இப்படத்தின் லாபம் இன்னும் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.