ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் 2 இந்த வருட ஆரம்பத்தில் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக்காகி வருகிறது.

இந்நிலையில் யுஏஇ யில் 27 திரையரங்குகளிலும், கத்தாரில் எட்டு திரையரங்குகளிலும், ஓமனில் இரு திரையரங்குகளிலும் த்ரிஷ்யம் 2 திரையிடப்பட்டுள்ளது.

நேரடியாக ஓடிடியில் வெளியான பிறகு ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது அரிது. மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 அதனை சாதித்திருக்கிறது.