ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையைப் பொறுத்த வரை, ப்ரீத்தலைசரில் சோதிக்கப்படும் பொழுது, ஒருவரின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு 30 மி.கிராமிற்கு மேல் இருக்க கூடாது. 30- 100 மி.கி வரை ஒரு வாகன ஓட்டுனர் பிடிபட்டால், அவர் முதன் முறையாக பிடிபட்டு இருந்தால் அவருக்கு ஐந்து மணி நேரம், போக்குவரத்து மேலாணமை பயிற்சி வழங்கப்படும்.
ஐந்து மணிநேரம், கடும் வெயிலில் வியர்வைச் சிந்தி போக்குவரத்து பணியில் ஈடுபட வேண்டாமெனில், தயவு செய்து குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
நவம்பர் 2011 முதல் இதுவரை 16,138 பேர் பிடிபட்டு இந்தப் பணியில் ஈடுப்படுத்த பட்டுள்ளனர். இவ்வாறு, சம்பளமில்லா அப்ப்ரண்டிஸ்கள் கிடைப்பதில் போக்குவரத்து காவல் துறை மகிழ்ச்சியடையக் கூடும்.