சென்னை:
டிரிங்க் அன்ட் டிரைவ் ‘ஆடி’ கார்ஐ ஸ்வர்யாவுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஆடி கார் ஐஸ்வர்யா கடந்த மாதம் சம்பவத்தன்று  நள்ளிரவு 2 மணி அளவில் போதையில் கார் ஓட்டிவந்தபோது தரமணி ரோட்டில் முனுசாமி என்பவர் மீது மோதினார். இந்த விபத்தில் முனுசாமி அதே இடத்தில் பலியானார்.

ஆடி கார் ஐஸ்வர்யா
ஆடி கார் ஐஸ்வர்யா

இதையறிந்த ஐஸ்வர்யா, உடனே அந்த இடத்தை விட்டு தப்ப முயன்றபோது, பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த கோடீஸ்வரர் வில்டனின் மகள் ஐஸ்வர்யா. பொழுதுபோக்கிற்காக ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த அவர் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு போதையில் வந்தபோது விபத்தை ஏற்படுத்தினார்.
வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வந்தால் ஐஸ்வர்யாவுக்கு கொண்டாட்டமாம். அன்று இரவு தனது நண்பர்களுடன் சேர்த்து குடித்து கும்மாளமிடுவது வழக்கமாம். அப்போது தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாக நகர் முழுவதும் செல்வது அவரது பொழுதுபோக்காம். பின்னர் தனது தோழி வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டு மறுநாள்தான் வீட்டுக்கு போவாராம்.
சம்பவத்தன்றும் தனது தோழி வீட்டிற்கு செல்லும்போதுதான், தரமணி சாலையில் முனுசாமி என்பவர் மீது மோதினதும், அந்த விபத்தில் முனுசாமி இறந்ததும் நடந்தது.
இந்த வழக்கில் போலீசார் நேர்மையாக நடந்துகொண்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதன் காரணமாக அவர்மீது ‘அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக பிரிவு 304/2’ கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆடி கார்  - உள்படம் இறந்த முனுசாமி
ஆடி கார் – உள்படம் விபத்தில் இறந்த முனுசாமி

கடுமையான இந்த பிரிவில் வழக்கு பதிந்ததால், அவருக்குகு ஜாமின் கிடைப்பபதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரிவு படி வழக்கு பதிவு செய்தால்  குற்றவாளிக்கு உடனடியாக ஜாமின் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக,  தொடர்ந்து  5 முறை ஜாமின் மனு தாக்கல் செய்தும்  ஐஸ்வர்யாவுக்கு ஜாமின் வழங்கப்பட வில்லை.
பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும், ஐஸ்வர்யா விஷயத்தில் சட்டம் தன் கடமையை  செவ்வனே செய்தது.  இதன் காரணமாக ஆடி கார் ஐஸ்வர்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறைச்சாலையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
இன்று காலை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த ஐஸ்வர்யா ஜாமின் மனுவை விசாரித்த  நீதிபதி, ஐஸ்வர்யாவுக்கு  நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவில்,  ஐஸ்வர்யா இரண்டு வாரகாலத்திற்கு கிண்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது.
40நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஐஸ்வர்யா இன்று மாலை விடுதலையாவார் என தெரிகிறது. இன்று விடுதலையாகாவிட்டால், அடுத்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் வரும் செவ்வாய்க்கிழமையே வெளி வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது