திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 80 கோடி ரூபாயில் ஆறுகளை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயண பேருந்துகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்காக 11 மகளிர் விடியல் பேருந்துகள் தயாராக இருந்தன. ஆனால், பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் திறக்க காலதாமதமாவதால், இந்த மகளிர் பேருந்துகள் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன” என்றார்.
(திருச்சி, பஞ்சப்பூரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் மே 9ந்தேதி அன்று முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின், விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் பஞ்சபூர் பேருந்து நிலையம் இருக்கிறது என்று என்று கூறினார்/ ஆனால், அமைச்சர் நேரு, ghஞ்சப்பூரில் பேருந்து நிலையம் திறக்க காலதாமதமாவதால், மகளிர் பேருந்துகள் மத்திய பேருந்தில் இயக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.)
மேலும் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனைகள் வழங்கி உள்ளார். பருவ மழையை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 80 கோடி ரூபாயில் ஆறுகளை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை திறக்கப்படும் போது முதல் இரண்டு போக பாசனத்தில் முதல் போக பாசன வாய்க்காலை தூர் வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக மற்ற வாய்க்கால்கள் தூர்வாரப்படும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஆறுகளில் அரசே விதிகளை மீறி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை, தூர் வாரும் பணி என அமைச்சர் கூறுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.