சென்னை:

மிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவத்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மாணவர்களை எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு பாடத்துடன் நற்பண்புகளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வும்  கூறியவர்,  ஊடக தமிழில் சி.பா ஆதித்தனார் செய்த சீர்திருத்தம் பள்ளி பாடதிட்டத்தில் இடம்பெற உள்ளது. 11-ம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் அவருடைய வரலாறு சேர்க்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

அந்த பாடத்தில்,  கிராமத்தில் உள்ள எளிய மக்களும் புரியும் வண்ணம் அவர் தினத்தந்தியில் தமிழை கொண்டு வந்தது தொடர்பான விபரங்கள் அதில் இடம் பெற இருப்பதாகவும் கூறினார்.

மேலும், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும்,  மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத்தரும் வகையில் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.