கமலைச் சுற்றி வருகிறது தமிழக அரசியல். இந்த பரபரப்பான சூழலில், அவரது அண்ணன் சாருஹாசன் அதிரடியான பதிவுகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சிறிது நேரத்துக்கு முன் அவர் பதிவிட்டது:

கமலஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. தமிழ் மக்கள் ஒரு பெரியாரின் நேர்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள். 1952 ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு சென்னை இராஜதானியில் அறுதி பெரும்பான்மை இல்லாமல் போனது.

அன்று பெரியார் தலையிட்டு அவர் சொன்ன கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் காமன்வீல் பார்டி தலவர் மாணிக்கவேல் நாயக்கரையும் பமகவின் அன்றைய தலைவர் பழனிச்சாமி கவுண்டரையும் அமைசரவையில் சேர்த்துக் கொண்டு இராஜாஜி அவர்களை முதல்வராக ஒப்புக்கொண்டால் 14 அல்லது 15 உறுப்பினர்களை காங்கிரசுக்கு வாக்களிக்க செய்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவி செய்தார்…
பின்னால் பெரியார் யோசனைப்படி இந்த இரு கட்சிக்கரர்களையும் காங்கிரசில் இணைய செய்தார். அன்று அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்து திமுகவை 1949 ஆண்டு ஆரம்பித்தவர்.
1952 தேர்தலில் திமுக போட்டியிடவே இல்லை. 1957 தேர்தலில்15 உறுப்பினருடன் ஆரம்பித்த திமுக 62 இல் ஐம்பதாகி 67 இல் எம்ஜீஆர் சுடப்பட்டதின் எதிர் விளைவாக ஆட்சிக்கு வந்தது.. ……………………
கமல ஹாசன் ஒரு பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்பதை திராவிட தமிழன் தான் சாகும் வரை மறக்க மாட்டான்…” –
இவ்வாறு சாருஹாசன் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]