நெட்டிசன்:

*Dr.Safi* Nagercoil 

தமிழகத்தில் திராவிடம் பல வருடங்களுக்கு முன்னரே வென்ற  *குழந்தைகளின் உணவின்மையும் ,  ஊட்டசத்து குறைபாடு தான் இன்றைய  பீகாரின் இந்த பெரும் சோகத்தின் காரணம்*   ,

என்ன சார் இது ..புது கதை ??

இல்லை சார்

இது பழைய கதை ,.

நான் பள்ளி பயிலும்போது , மதிய உணவு இடைவேளையில் என்னுடன் பயின்ற மாணவர்கள் உட்பட வீட்டிலிருந்து கொண்டுவருவது ஒரு தட்டு மட்டுமே ,

ஏனெனில் உணவு பள்ளியில் கிடைக்கும்

உணவு மட்டுமல்ல..

பருப்பு சாம்பார் , காய்கறி கூட்டு , முட்டை என புரதம் நிறைந்த உணவு ,

பலர் பள்ளி பயின்றதே அந்த ஒதுவேளை சத்துணவிற்கு என்பதும் ஆணித்தரமான உண்மை ,

அப்படி மதிய உணவை வழங்கிய காமராஜரும்  அதன் பிறகு  அதனை  சத்து உணவாக , ஒரு அரசு திட்டமாக செயல்வடிவம் கொடுத்து , லட்சோப லச்சம் குழந்தைகளின் பசியையும் , அந்த காலத்தில் பரவிக்கிடந்த உணவின்மை , சத்துகுறைபாடு , குழந்தைகள் இறப்பு , குடும்ப நல்வாழ்வு , பொது சுகாதாரம் , சுய ஒழுக்கம் , கல்விகற்றல் விகிதாச்சாரம் , என அனைத்தைய ஒவ்வொன்றாய்

*பார்த்து* ,
*பார்த்து செதுக்கியது திராவிட சிந்தனைகளோடும்* ,

*பகுத்தறிவோடும் நடைபெற்ற ஆட்சிகள் என்பதில் எவருக்கேனும் ஐயம் இருந்தால் அவர் வேற்றுகிரக வாசி என்றே சொல்லவேண்டும்* ,

இன்று தமிழகத்தில் ,

பசி ,
பசியால் உயிரிழப்பு,
ஊட்டசத்து குறைபாடு ,
ஊட்டசத்து குறைபட்டினால் நோய் தாக்கம் ,
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவீதம் ,
குழந்தைகளின் வளர்ச்சி கணக்கீடு,
கருவுற்ற தாய்மார்களின் நலன் ,
சிசு நலன் பேணுதல் ,
தாய் , சிசு இறப்பு விகிதம்

என அனைத்து விதத்திலும் தமிழகம் எட்ட முடியாது இடத்தில் வீற்றிருப்பதன் காரணமும்

*திராவிடமே ..*

இந்த திராவிட சிந்தனை இல்லாததன் , கிடைக்கபெறாததன் , அந்த சுகத்தை அடைந்திட முடியாத பல மாநிலங்களில் முதன்மையானது ,

*பீஹார்*

எப்படி சார் ..??

பீகாரின் இன்றைய பெரும்சோகத்தின் காரணத்தை அலசினாலே உங்களுக்கு புரியும்

பீஹார் மாநிலத்தின் முசாபர்நகர் பகுதி மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் ஒன்று ,

அங்கே அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் *லிச்சி எனும் ஒருவகை பழம்* ,

இந்த பழங்கள் பொதுவாக கோடை காலத்தில் கிடைக்ககூடியது ,

*அங்கே உணவுபற்றாக்குறை மற்றும் வறுமையால் ,குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகாலை நேரத்திலேயே கூலிக்காக இந்த பழங்களை பறிக்க சென்றுவிடுவர்* ,

இதில் கொடுமை என்னவெனில் , இந்த தொழிலாலர்களில் ஏனையருக்கு இரவு உணவு கிடையாது  , காலையில் வெறும் வயிற்றில் கிடைக்கும் இந்த பழத்தை , தீரா பசியின் காரணமாக உண்பர் ,

அன்ன பாருங்க ,

இந்த பழத்தில் உள்ள ஒருவித நச்சுப்பொருள் ,

*MCPG – Methylene Cyclo Propyl Glycine* உணவில்லத உடலினுள் ஏற்படுத்தும் அமில மாற்றங்களி னால் இந்த குழந்தைகள் உடலில் உடனடியாக ரத்த சர்க்கரை அளவு குறைந்து போய் , வலிப்பு வந்து மயங்கிவிடுகின்றனர் ,

அப்படி நோய் பாதித்த பலருக்கு , போதிய ஊட்டசத்து , நோய் எதிர்ப்பு குறைபாடு இருப்பதால் ,நோய் எதிர்தன்மை தாமதப்படுத்தப்பட்டு அங்கே பரவிகிடக்கும் மோசமான நோய்களால் தாக்கப்படுகின்றனர்  இதில் அதிகமான பேர்

*மலேரியா*,
*வைரஸ் காய்ச்சல்* ,
*மூளை ,மற்றும் மூளை நீர் தொற்று* என ஒவ்வொன்றாய் பாதித்து ,

நோய்தொற்று தற்காப்பின்மை ,
நோய் பரவுவதை தடுக்கும் திறனின்மை ,
நோய் தொற்றியவருக்கான சீரிய மருத்துவம் இன்மை ,
நோய் கொண்டவருக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் இன்மை ,
அதிகப்படியான் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் இன்மை ,
பணி செய்யும் மருத்துவருக்கும் போதிய பாதுகாப்பின்மை ..

என … எண்ணில் அடங்கா காரணங்களால் இத்தனை உயிரிழப்புகள்

*நாம் அறியும் 140 என்ற எண்கள் உள்ளபடியே மிக குறைவானதே*!!! ஏனெனில்  ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி  மற்றும்  கெஜ்ரிவால் மருத்துவமனை  எனும் இரு பெரிய மருத்த்வமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளிம் எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது ,

மற்ற மருத்துவமனை இறப்புகள் ,
மருத்துவம் கிடைக்கபெறாத இறப்புகள் ,
மருத்துவமனை வரும் வழியில் நேரிடும் இறப்புகள் என இவையில்  அடங்காத எண்கள் நிச்சயமாக மறைக்கப்பட்டிருக்கிறது ,

அப்படியா சார்,

இதில் அரசு எதுவுமே செய்யவில்லையா ??

நான் ஏற்கனவே பதிவிட்டது போல் மத்திய மாநில அமைச்சர்கள் ஊடக சந்திப்பில் கவலைகொண்ட கிரிக்கெட் ஸ்கோர் பற்றியும் சொல்லிவிட்டேன் ,

பிரதமர் இன்றளவில் கூட பீகார் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார்

கிரிக்கெட் வீரர் ஷிக்கார் தாவனுக்கு கிடைக்கும் பரிவு இந்த பீகார் பிஞ்சு குழந்தைகளுக்கு இல்லை

ஊடகங்கள் என்ன சார் செய்யுது ??

மருத்துவர்களை மட்டும் குறை சொல்லுது ..!!

அடுத்த விடயம்

*பீகாருக்கு இது புதிதல்ல*

2014 ல் இதே நோய் , 179 உயிரை கொன்றது
2015 ல் இதே நிய் 138 உயிரை கொன்றது

2016

2017

சுமார் 50+ குழந்தைகளை கொன்றது

ஆனால் இன்று வரை இதற்கான காரணியை அறிந்து தடுத்திட நடவடிக்கைகள் இல்லை ,

மத்திய அமைச்சர் 2020 க்குள் பீஹாரில் 100 பேர் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படும் பெரிய ஐ.சி.யு அமைக்கப்படும் என சொன்னாரே சார் ???

நம் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் 2014 ல் இதே பீஹாருக்கு சென்று அப்போது இருந்த நிலை கண்டு  ஒரு வருடத்திற்குள் வைரஸ் கண்டறியும் ஆய்வுகூடம் பீஹாரில் அமைக்கப்படும் ,.அது நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உதவிட முடியும் என்றார்  அவரது 5 வருட பணியும் முடிந்து அடுத்த முறை பொறுப்பில் அதேபோன்ற வாக்குறுதிகள் தருவது தான் வேடிக்கை !!

மேலும்

*NCDC* எனும் அமைப்பு இந்தியாவில் உள்ளது
இந்த அமைப்பு தான் நாட்டில் இருக்கும் அபாயகரமான புதிய வகை நோய்கள், தொற்றுக்கள் , நோய் காரணிகள் பற்றிய ஆய்வுகள் செய்து உலக சுகாதார மையத்திற்கும் , நாட்டின் மத்திய மாநில அரசிற்கும் அறிக்கை வழங்கி தீர்வுகள் சொல்லும்

*அப்படிபட்ட அமைப்பின் 9 அங்கங்களில் வெறும் 434 பணியாளர்கள்* ,
*அதாவது 137 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் 434 பேர்.*

*அதற்கு பட்ஜெட் 233 கோடி*

மறந்துடாதீங்க ..

2000 கோடில சிலை ..

எப்படீ…..

இதேபோல் அமெரிக்காவில் *CDC* எனும் ஆய்வமைப்பு உள்ளது

*அதில் 10000 க்கும் மேற்பட்ட பணியாளர்களும்* ,
*சுமார் 77000 கோடி பட்ஜெட்டும் ஒதுக்குவதாக செய்தி .*

இப்ப புரியுதா ??

அமெரிக்காவில் ஏன்  நோய் இல்லை ,
வரும். நோயும் உடனே கட்டுக்குள் கொண்டுவரபடுகிறது என ??

ரைட்டு …

ஊட்டசத்தும் , உணவும் இன்றி இறக்கும் குழந்தைகள் கொண்டுள்ள நாட்டை

டிஜிட்டல் ஆக்குவோம்
புல்லட் ரயில் விடுவோம்

என சொல்வதை விட

இதுபோன்ற மாநிலங்களில் எல்லாம் ,

ஒரு
*பெரியாரும்*
*அண்ணாவும்*
*காமராசரும்*
*கலைஞரும்*
*எம்.ஜி.ஆரும்*

இல்லை என்பதே ..

திராவிடத்தின் வெற்றி !!