சென்னை,

ரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் கமலஹாசன் திராவிட அரசியல் செய்வார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் திராவிடம் குறித்து கமல் கூறியதாவது,

திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுமுதல் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகர் கமலஹாசன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி  21ந்தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும், அன்று முதல் தனது அரசியல் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கடந்த 16ந்தேதி இரவு தெரிவித்தார்.

இந்நிலையில், கலாம் வீட்டில் இருந்து தொடங்கும் கமலின் சுற்றுப்பயணம்,  முதல்கட்டமாக  மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல்  தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான்.  விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று.  நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.