சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் (வயது 22) fகடந்த 10ந்தேதி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து திராவிடத் தேர் என்ற தலைப்பில் என்.ஆர்.இளங்கோ மடல் எழுதி உள்ளார்.
சம்பவத்தன்று அதிகாலை பாண்டிச்சேரியில் இருந்து காரில் வந்தபோது, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அவரது கார் சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது நண்பர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இளங்கோவின் மகன் ராகேஷ் சாலைவிபத்தில் மரணம் அடைந்தது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட கட்சியினர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை 5 மணியளவில், அவரது உடல் ஊர்வலமாக சவுந்தர்யா காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், இல்லத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை, வேலங்காடு இடுகாட்டில் தகனம் நடைபெற்றது.
இந்த நிலையில், தனது மகன் மறைவை திராவிடத் தேர் என கட்சியினருக்கு என்.ஆர்.இளங்கோ மடல் எழுதி விளக்கி உள்ளார். அதில், திராவிடத் தேர் உருண்டோடி வென்றிட உடனிருப்பேன், திராவிடத் தலைவர் சொல்லின் வலிமையால் மீண்டு வருவேன். அன்பாய், ஆறுதலாய் இருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி என கூறியுள்ளார்.