ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V கோவிட் -19 தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளை இந்தியாவில் நடத்வுள்ள டாக்டர் ரெட்டி லேபாரெட்ரி.

Must read

கடந்த மாதம் ரஷ்யாவில் பொது பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஸ்புட்னிக் V – இன் சோதனை மற்றும் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க டாக்டர் ரெட்டியின் லேபாரட்ரி இணைந்துள்ளது. ரஷ்யாவின் தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் பேச்சு வார்த்தைகளில் ரஷ்ய நிறுவனம் ஈடுப்பட்டபின், இது முதல் முன்னேற்றம் ஆகும்.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் ரெட்டி லேப் (டி.ஆர்.எல்) இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V –  கோவிட் -19 தடுப்பு மருந்தின்  இறுதி கட்ட மனித சோதனைகளை நடத்திக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்தவுடன், நிறுவனம் பொது பயன்பாட்டிற்காக சுமார்  100 மில்லியன் டோஸ் வரை விநியோகிக்கத் தொடங்கும்.
“நிரூபிக்கப்பட்ட பாதுகாப்போடு நன்கு அறியப்பட்ட மனித அடினோவைரல் வெக்டரை அடிப்படையாகக் கொண்ட ஸ்பூட்னிக் V தடுப்பு மருந்து, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. இந்தியாவில் ஒழுங்குமுறை அதிகாரிகளால் வெற்றிகரமான சோதனைகள் மற்றும் தடுப்பு மருந்து பதிவு நடைமுறைகளுக்கு உட்பட்டு 2020 இன் இறுதியில் டெலிவரிகள் தொடங்கக்கூடும் ”என்று ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்), ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியம், டி.ஆர்.எல் நிறுவனத்திற்கு தடுப்பூசி விநியோகத்திற்காக வழங்கப்படும் என கூறினார்.

“முதல் மற்றும் இரண்டாம் கட்ட முடிவுகள் அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே வந்துள்ளது. மேலும் இந்திய கட்டுப்பாட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்துவோம். இந்தியாவில் கோவிட் -19 க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் ஸ்பூட்னிக் V தடுப்பு மருந்து நம்பகமான ஒன்றாக இருக்கக் கூடும்” என்று டிஆர்எல் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.வி.பிரசாத் தெரிவித்தார்.

புதிய செய்திகளின் படி, ரஷ்ய கோவிட் -19 தடுப்பூசி ஸ்பூட்னிக் V சோதனைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட செய்முறைகளை சமர்பிக்க ரெட்டியின் லேப் நிர்வாகத்தை டிஜிசிஐ கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் சமீபத்திய செய்தியாக, டாக்டர் ரெட்டியின் ஆய்வகம் இந்தியாவில் ரஷ்ய கோவிட் -19 தடுப்பு மருந்துக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்த ஒப்புதல் கோரி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை  முழுமையாக மதிப்பீடு செய்த மதிப்பீடு பொருள் நிபுணர் குழு (எஸ்.இ.சி) மேலும் தகவல்களுடன் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்திலிருந்து திருத்தப்பட்ட வழிமுறைகளை கோரியுள்ளது, இப்போது டாக்டர் ரெட்டியின் ஆய்வகம் டி.சி.ஜி.ஐக்கு ஒரு புதிய நெசெய்முறைகளை வழங்க வேண்டும், ”என்று ஒரு அரசு அதிகாரி கூறினார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article