சென்னை :

மிழகத்தில் கொரோனா தொற்று நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட உயர் மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்த ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

“கொரோனா தொற்றுவதற்கான அதிக ஆபத்து இருப்பதால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் சமூகத்தை காப்பதற்காக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்” என்று அந்த டிவீட்டில் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் கடந்த வாரம் மாற்றப்பட்டபோது, பீலா ராஜேஷ் மிகவும் திறமையானவர் அவரை மாற்றியது தனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்ட மருத்துவக்குழுவில் பிரதீப் கவுர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக தனிமையில் உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தின் உயர் மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரே தனிமைப் படுத்திக்கொண்டிருப்பது தமிழக மக்களிடையே மேலும் அச்சமூட்டுவதாக உள்ளது.