டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், தொற்றிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

89 வயதாகும் இந்திய முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த  19ந்தேதி (ஏப்ரல்) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.  இதையடுத்து அன்று மாலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். வயோதிகம், இணை உடல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே, மன்மோகன் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவலறிந்ததும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவர் குணம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

சுமார் 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு,  தொற்று முழுமையாக குணமடைந்ததால்,  மன்மோகன் சிங் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.