சென்னை

மிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

அதில்

”தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17-ம் கல்வி ஆண்டில் 2-ம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது.

அதன்படி 2022–23-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் வரும் 2023–24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரையும், 2024–25-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரையும் தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்டப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளுக்குப் பொருந்தும்.

இந்த மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும். எனவே, அனைத்துவித தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணியமர்த்தி, மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயம் கற்றுத் தர வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை, தனியார்ப் பள்ளிகள் கடைப்பிடிப்பதை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். 

தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17-ம் கல்வி ஆண்டில் 2-ம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது.

அதன்படி 2022–23-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் வரும் 2023–24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரையும், 2024–25-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரையும் தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது.  இது மாநில பாடத்திட்டப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளுக்குப் பொருந்தும்.

இந்த மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாகக் கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும். எனவே, அனைத்துவித தனியார்ப் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணியமர்த்தி, மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயம் கற்றுத் தர வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை, தனியார்ப் பள்ளிகள் கடைப்பிடிப்பதை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.” 

எனக் கூறப்பட்டுள்ளது.