மும்பை: கிரிக்கெட் தொடர்கள் ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தனது ஓய்வுநேரத்தில் டிக்டாக் மூலமாக, தன் ரசிகர்களிடம் பேசியுள்ளார் யஸ்வேந்திர சஹல்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ரத்து மற்றும் ஐபிஎல் தொடர் ரத்து உள்ளிட்ட காரணிகளால், கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்து வருகிறது. தங்களின் ஓய்வுநேரத்தை சிலர் வேறுவழிகளில் பயனுள்ளதாக மாற்றுகின்றனர்.
இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன்களான விராத் கோலியும், ரோகித் ஷர்மாவும் சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்க, இந்தியப் பந்துவீச்சாளர் யஸ்வேந்திர சஹல், டிக்டாக் மூலமாக தன் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.
தனக்குப் பிடித்தது & பிடிக்காதது, தனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை போன்றவை குறித்து பேசியுள்ள அவர், ஒரு நடனக் காட்சியையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.