சென்னை
முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 15 மரங்களை அப்புறப்படுத்த அமைச்சர் துரை முருகன் கேரள அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
வெகுநாட்களாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே இருந்து வருகிறது. கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருந்தாலும் அந்த அணையைத் தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த அணை மிகவும் பழமையாகியதாக கேரள அரசு கூறி வ்ருகிறாது
எனவே அணை பழுதானதால் அதை இடித்து விட்டு வேறு அணை கட்ட வேண்டும் எனக் கேரளாவில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிபுணர்கள் இந்த அணையை ஆய்வு நடத்தி அணை பலமாக உள்ளதாகத் தெரிவித்த போதிலும் இதை கேரள அரசு ஒப்புக் கொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முல்லைப் பெரியாறு அணையை ப்லப்படுத்ட 15 மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதையொட்டி அதற்கு கேரள அரசு அனுமதி அளித்தது. ஆனால் அந்த அனுமதியைக் கேரள அரசு உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இது தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் கேரள அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “தற்போது முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். எனவே இதற்காக 15 மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். எனவே ஏற்கனவே அளித்த அனுமதியை ரத்து செய்த கேரள அரசு அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.