சென்னை: நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். ரஜினி குறித்த விமர்சனம் சர்ச்யைன நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்த அமைச்சர் துரைமுருகன் சரண்ராகி உள்ளார்.
புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு, அமைச்சர் துரைமுருகன், பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ரஜினியை கடுமையாக சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. மேலும், இது தொடர்பாக அமைச்சருடன் முதலமைச்சரும் பேசியதாகவும், ரஜினிகுறித்த விமர்சனத்துக்கு அவரிடம் பேசி வருத்தம் தெரிவிக்க சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில் இன்று காலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தானும் துரைமுருகனும் நீண்ட கால நண்பர் என கூறி அவரது விமர்சனத்தை பொருட் படுத்தவில்லை. இதனால், சர்ச்சை ஒய்ந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் , நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று கூறினார்.