கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் இந்துக்களையோ, இந்து வழிபாட்டு தலங்களையோ குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் வேலையை பாஜக கைவிட வேண்டும் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.

நாசிக்கில் உள்ள திரிம்பாகேஸ்வரர் கோவில் குருக்கள் இருவருக்கு எதிராக வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதையொட்டி சிவசேனா கட்சி பாஜக மீது கடுமையான விமர்ச்சனத்தை முன்வைத்துள்ளது.
தன்னை மதசார்பற்ற ஆட்சியாக காட்டிக்கொள்ளும் நோக்கில் மோடி அரசு காங்கிரஸ், லாலு பிரசாத், முலாயம்சிங் ஆகியோரின் அரசுகள் கூட செய்யத்துணியாத ஒரு செயலை செய்துள்ளது. மத மாற்றத்துக்காக வெளிநாட்டுப்பணம் வந்து குவியும் தேவாலயங்கள், மதராசாக்கள் மற்றும் மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்க இவர்களுக்கு துணிவிருக்கிறதா? அங்குதானே வருமானவரித்துறை சோதனை நடத்தி இருக்க வேண்டும்?
கறுப்புப்பண விஷயத்தில் இந்துக்களை பலிகடா ஆக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
 
Dont target Hindus Shiv Sena tells BJP after IT notice to Trimbakeshwar priests