ஜெனிவா:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தளர்த்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் டாக்டர் டகேஷி கசாய் தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை 1லட்சத்து 70 ஆயிரத்தை கடந்து விட்டது.
சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பி உள்ளது. அதுபோல இந்தியா உள்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.