துருக்கியில் பெண்கள் ஐஸ்கீரிமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அநநாட்டில் உள்ள பெண்கள் நாக்கால் ஐஸ்கிரீமை சாப்பிடக்கூடாது என வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
இஸ்லாம் மதத்தில் குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், துருக்கி உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது தான் சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் துருக்கியில் உள்ள பக்சிலர் என்ற மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அமைப்பு சார்பில் பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென 2மாத பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு 2 மணிநேரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது பெரும் விமர்சனத்திற்கு இடமளித்துள்ளது.
பயிற்சி வகுப்பில் குறிப்பாக பெண்கள் நாக்கால் நக்கில் ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பெண்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, ஐஸ்கிரீமை இனி நாம் உருவாக்கியப்பின்னர் தான் சாப்பிட வேண்டும் என சில பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நாங்கள் எப்படி இருக்க வேண்டுமென எங்களுக்கு தெரியும், நீங்கள் அடக்கு முறையை எங்கள் மீது தினிக்காதீர்கள் என ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு கூட பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது